2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சீகிரியா சுவரில் பெயர் எழுதிய பெண் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய பெண் ஒருவர் இன்று (15) தொல்பொருள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அவிசாவளையைச் சேர்ந்த அந்தப் பெண், நண்பர்கள் குழுவுடன் குறித்த இடத்தைப் பார்வையிட்டார்.

இதன்போது “தயவு செய்து இச்சுவரை தொட வேண்டாம்” என்று பலகை வைத்திருந்த இடத்தில் குறித்த பெண் தனது பெயரை எழுதியுள்ளார்.

பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னங்களை அழிப்பதும், சேதமாக்குவதும் குற்றம் என்ற அடிப்படையில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பெண் சீகிரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, நாளை (16) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .