Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் பதினைந்து பல்வகை போக்குவரத்து மையங்களை நிர்மாணிப்பதற்காக அடுத்த பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.
ரயில்கள்,பேருந்துகள் மற்றும் டெக்சிகளை ஒரே இடத்திலிருந்து முன்பதிவு செய்ய கூடிய வகையில் போக்குவரத்து மையங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
2029 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இது போன்ற குறைந்தது ஐம்பது பல்வகை போக்குவரத்து மையங்களையாவது தொடங்குவதே இவ் அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர்மேலும் கூறினார்.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு தொடக்க விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.
இந்த திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. "நாட்டின்போக்குவரத்தை வலுப்படுத்துவதே எங்கள் முதன்மையான குறிக்கோள்.எத்தனை சாலைகள் அமைக்கப்பட்டாலும், எத்தனை போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டாலும், பொது போக்குவரத்து மேம்படுத்த படாவிட்டால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.
போக்குவரத்தை ஒரு நாட்டின் பொருளாதார செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாக அழைக்கலாம்.
கடந்த முப்பது முதல் நாற்பது ஆண்டுகளில், பொது போக்குவரத்து புறக்கணிக்கப்பட்ட தாலும்,மோசடி மற்றும் ஊழல் காரணமாகவும் பொது போக்குவரத்து அமைப்பு பெருமளவில் சரிந்துள்ளது.
ஜனாதிபதிக்கு நேரம் இருந்தால், இந்த நாட்டின் மக்கள் இந்த பிரதான பேருந்து நிலையத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள ஐந்து நிமிடங்கள் இந்தப்பகுதியில் நடந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பேருந்து நிலையம் என்பது மக்கள் சந்தித்து நண்பர்களை உருவாக்கும் இடமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago