2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சகோதரியை வன்புணர்ந்த சகோதரன் கைது

Editorial   / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதன் பின்னர் தலைமறைவாகியிருந்த சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்,  பிபில காவல் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகம, பரகொட, நுகவெலலந்தவில் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் சகோதரரான 25 வயதான செங்கல் தொழிலாளி, வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை 31/08/2025 அன்று,  பாலியல் வன்கொடுமை செய்தார்.

சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அவர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்று, மறைந்திருந்தபோது பிபில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஒரு வழக்கறிஞர் மூலம் காவல்துறையில் சரணடைய வந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

பிபில காவல்துறை பொறுப்பதிகாரி சுரவீர ஜெயலத் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X