2025 மே 24, சனிக்கிழமை

சஜித் அணியில் மூவர் இராஜினாமா

Editorial   / 2025 மே 24 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தில் சமகி ஜன பலவேகயவின் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரத்தொட்ட அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார். அதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். கட்சியால் ஏற்பட்ட பல்வேறு தாமதங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மேலும் பலர் தங்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்தார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X