2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

சஜித் நிவாரண பொருட்கள் வழங்கள்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்க்கட்சித் தலைவர் படகு மூலம் சமைத்த உணவு மற்றும் குடிநீரை எடுத்துச் சென்றார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை கொலன்னாவை பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்திற்கு மத்தியில் படகு தேவை எடுத்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று பிற்பகலாகும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலையீட்டின் மூலம் கொலன்னாவை பிரதேசத்திற்கு இரண்டு படகுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. 

அவ்வாறு வழங்கி வைக்கப்பட்ட இரண்டு படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் குடிநீர் வசதிகளை நேரில் சென்று வழங்கி வைத்தார்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு எடுத்துச் செல்ல சமைத்த உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்  ஏற்பாடு செய்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X