Janu / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் அவசர கால சூழ்நிலை காரணமாக, ஜனாதிபதியால் கடந்த 29 திகதியிட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2464/32 ஆம் இலக்க வர்த்தமானியின் மூலம் 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசரகால (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) விதிமுறைகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, அவசர கால பேரிடர் நிலைமை குறித்து பொதுமக்களை பயமுறுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் எந்தவொரு வதந்தி அல்லது தவறான அறிக்கை தொடர்பாகவும், வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வ, டிஜிட்டல் அல்லது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், தானியங்கி அமைப்புகள் அல்லது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வேறு எந்த ஊடகங்கள் மூலமாகவோ, தொடர்பு கொள்ளப்பட்ட, வெளியிடப்பட்ட, உருவாக்கப்பட்ட அல்லது பரப்பப்பட்ட எந்தவொரு வதந்தி அல்லது தவறான அறிக்கை தொடர்பாகவும் சட்டம் அமல்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது முப்படையினருக்கு, மேற்கண்ட குற்றங்களை விசாரிக்க அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்தக் குற்றங்களுக்காக , முப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டால் அதை குறித்த பகுதியின் கட்டளை அதிகாரியிடம் தெரிவித்து, சந்தேக நபர் 24 மணி நேரத்திற்குள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் ஒரு பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டால், அதை குறித்த பிரிவின் பொலிஸ் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற பேரிடர் சூழ்நிலைகளில் தவறான தகவல்களை வழங்குவதும் உருவாக்குவதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தடையாக இருக்கலாம் என்பதால், இது மூலம் துல்லியமான தரவுகள் மட்டுமே பொதுமக்களுக்கு பரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 minute ago
13 minute ago
15 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
15 minute ago
15 minute ago