Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர்களான சஜித் பிரேமதாஸவும் அகில விராஜ் காரியவசமும் திங்கட்கிழமையன்று (23) ஆஜராகவுள்ளனர்.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம் சுவாமிநாதனும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
பாடசாலை புத்தகங்களை அச்சிடும் போது, அமைச்சரின் புகைப்படத்தை அதில் உள்ளடக்கியதினூடாக இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே, இவர் ஆஜராகவுள்ளார்.
வீடமைப்பு அதிகார சபைக்கு சட்ட விரோதமான முறையில் ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜிம் பிரேமதாஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026