2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘சஜித்தை களமிறக்கவே எதிர்பார்க்கின்றோம்’

Editorial   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதையே கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்காக கட்சியின் தலைமைத்துவம் செயற்பட்டு வருகிறதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவும் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியுமெனின் கட்சியின் பிரதித் தலைவருக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாதா என கேள்வி எழுப்பியுள்ள அவர், சஜித் பிரேமதாஸ களமிறங்கினால்  வெற்றிப் பெறுவார் என்பதை நாம் நிருபிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .