Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தககவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாசவை சந்திப்பதற்கு, கட்சியின் நாடாளுமன்ற பின்வரிசை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடலை, ஏழு நாள்களுக்குள் நடத்துமாறு, அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதமொன்றைக் நேற்று கையளித்தனர்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago