2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சஞ்சீவ கொலையாளியை சாட்சிகள் அடையாளம் காணவில்லை

Editorial   / 2025 ஜூன் 04 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் சாட்சி கூண்டில் வைத்து, பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை சாட்சிகளால் அடையாளம் காண முடியவில்லை.

  கொழும்பு மேதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல  புதன்கிழமை (04) அடையாள அணிவகுப்பை நடத்தியபோது சந்தேக நபர் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி 21 ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் பேரில், புதன்கிழமை (04)  பிற்பகல் அணிவகுப்பு நடத்தப்பட்டது,   சந்தேக நபரான துப்பாக்கிச் சூடு நடத்திய சமிந்து தில்ஷான், சிறைச்சாலை மற்றும் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அடையாள அணிவகுப்பைத் தொடர்ந்து, மேலதிக நீதவான் சந்தேக நபரின் விளக்கமறியலை 6 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார், சந்தேக நபரை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அன்றைய தினம் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

குற்றம் நடந்த நாளில் நீதிமன்ற மண்டபம் 5 இல் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறைக் கைதிகள் சாட்சிகளாக ஆஜர்படுத்தப்பட்டதாகவும், சாட்சிகள் சந்தேக நபரை அடையாளம் காணவில்லை என்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர் கூறினார்.

வழக்குத் தொடுநர் தரப்பில்கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் ஆஜரான அதே வேளையில், சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி அஜித் பத்திரண உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு ஆஜரானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .