2026 மே 01, வெள்ளிக்கிழமை

’சடலங்களை அடக்கம் செய்ய காணிகளைத் தெரிவு செய்க’

Editorial   / 2021 மார்ச் 10 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்குரிய காணிகளைத் தெரிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான இடங்கள் குறித்துஇ விரைவாக அறிவிக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


சடலங்களை அடக்கம் செய்வதற்காக, கிழக்கு மாகாணத்திலுள்ள மற்றுமோர் இடம் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், பரிந்துரைக்கப்பட்டுள்ள இடம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளோரை அடக்கம் செய்வதற்குரிய இடமா என்பது தொடர்பில் ஆராயப்படும் என்றார். 


மட்டக்களப்பு – ஓட்டமாவடி, சூடுபத்தினசேனையில் இதுவரையில் 30 இற்கும் மேற்பட்டோரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .