2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 50 பேர் கைது

Janu   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியாபார விசா (Business Visa) மூலம் இலங்கைக்கு வருகை தந்து, விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (21)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் 47 சீன நாட்டவர்களும், 2 மலேசிய நாட்டவர்களும், ஒரு இந்திய நாட்டவரும் அடங்குகின்றனர். இவர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு (Deport) நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

டி.கே.ஜி.கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .