2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத கருக்கலைப்பு ; மூவர் கைது

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (13) முல்லைத்தீவு பொலிஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து ​பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந் நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு தந்தை, உடந்தையாக இருந்த தாயார் மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் மருந்தகம் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X