Mayu / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை (13)அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன் போது 02 படகுகளும், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். 07 பேரும் அவர்களின் உடைமைகள் மற்றும் கடல் அட்டைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



31 minute ago
32 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago
46 minute ago
1 hours ago