2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சட்டங்களுக்கமையவே துறைமுக நகரத்திட்டம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

'கடல் கடந்த நிதிச் சந்தை நடவடிக்கைகளுக்கான நிலையமொன்றை உருவாக்குவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக, கொழும்பு துறைமுக நகரத்திட்டத்துக்கு எதிரான இயக்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, தேசத்துக்குப் பாதிப்பான எதையும் அரசாங்கம் செய்யாது எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்துக்கு எதிராகப் பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆனால், தேசத்துக்குப் பாதிப்பான எதையும் செய்யப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது' என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர், இந்த வேலைத்திட்டம் தொடர்பாகப் பல நிபந்தனைகளை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும் அவற்றைச் சீனா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிபந்தனைகளில், சூழலியல் விடயங்களும் உள்ளடங்கியிருந்ததாக அவர் தெரவித்தார். அத்தோடு, துறைமுக நகரம், இலங்கையின் பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்டிருக்குமெனவும் இலங்கையின் மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் அங்கமாகக் காணப்படுமெனவும் நாட்டின் சட்டங்களால் வழிநடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

கடலிலிருந்து மீட்கப்படவுள்ள நிலத்தின் ஒரு பங்கை வழங்கும் முன்னைய ஏற்பாடு மாற்றப்பட்டு, புதிய ஒப்பந்தத்தின்படி, 99 ஆண்டுகளுக்கான குத்தகைக்கு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு, இந்த வேலைத்திட்டத்தில், சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .