2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சட்டவிரோத ஆவணத்தயாரிப்பு: இருவர் கைது

Thipaan   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட விரோதமான முறையில் விசா, அடையாள அட்டை, போலி நாணயத்தாள்கள், அதிர்ஷ்ட இலாபச்சீட்டு போன்றவற்றைத் தயாரித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கலகெதர பொலிஸார், இருவரைக் கைது செய்துள்ளனர்.

கண்டி, கலகெதர பகுதியில் வைத்தே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்கான உபகரணங்கள் உட்பட, போலி 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் ஆறும், போலி ஆயிரம் ரூபாய் தாள்கள் ஒன்பதும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும்,  போலி அதிர்ஷ்ட இலாபச்சீட்டு 22, பென் ட்ரைவ் ஒன்றும், இறுவெட்டுக்கள் 5, போலி விசா, அடையாள அட்டை தயாரிப்புக்கெனப் பயன்படுத்தும் புகைப்படங்கள் பலவும், கைப்பற்றப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 40, 21 வயதுடையவர்கள் எனவும் அவர்களை, கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கலகெதர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .