2025 நவம்பர் 26, புதன்கிழமை

சோதனைக்கு வந்த பெண்ணை வன்புணர்ந்த வைத்தியர்

Janu   / 2025 நவம்பர் 26 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹதுடுவ, வேதர மாவட்ட மருத்துவமனையில் வைத்து  26 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த  40 வயதுடைய வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தலா  ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய  இரண்டு சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

 சந்தேக நபர் ரத்மலானையைச் சேர்ந்த வைத்தியர் என தெரியவந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண் கடந்த 12 ஆம் திகதி  தனக்கு ஏற்பட்ட ஒரு நோய்க்காக கஹதுடுவ வேதர மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது  வைத்தியரின் அறிவுறுத்தலின்படி, சிறுநீர் மாதிரியை பரிசோதித்த பின்னர் 19 ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்

 இதன்போது, வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை அளிக்க ஒரு பெண் வைத்தியர் இருந்த நிலையில், சோதனை அறிக்கைகளை ஆய்வு செய்து சிகிச்சை பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

 அந்த நேரத்தில்,  சந்தேக நபரான வைத்தியர், மற்ற நோயாளிகளின் சிகிச்சையை புறக்கணித்து, குறித்த பெண்ணிடம் இருந்த  மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அதை  பரிசோதித்துள்ளார்.

பின்னர் குறித்த பெண்ணை சோதனை செய்ய வேண்டும் என கூறி பெண் வைத்தியர்கள் இல்லாத அறையொன்றுக்கு அழைத்துச் சென்று அங்கு சோதனை ​செய்து , பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X