Editorial / 2025 நவம்பர் 26 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒடிசாவில் பாத்ரக் நகரில் சரம்பா சந்தை முதல் ரயில் நிலையம் வரை அண்மையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையின் முன் பகுதியில் இருந்த மாடிப் படிக்கட்டுகளும் இடிக்கப்பட்டன. இதனால் முதல் மாடியில் உள்ள வங்கிக் கிளைக்கு செல்ல வழியில்லாமல் போனது. இந்நிலையில் இந்த வங்கிக்கு செல்ல அதன் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் மர ஏணியை பயன்படுத்தும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது
இதில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதில் ஒருவர், "இது கொள்ளையர்களை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் கொண்ட வங்கி போல் தெரிகிறது” என கிண்டல் செய்துள்ளார்.
இந்நிலையில் வங்கிக்கு செல்ல கட்டிட உரிமையாளரால் இரும்பு ஏணி நிறுவப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 minute ago
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
31 minute ago