Editorial / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் பெருமளவிலான தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சந்தன கத்ரியாரச்சி, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு (CCD) கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கெஸ்பேவ நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனையிடும் கட்டளைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 16-ம் திகதி, பிலியந்தலை - மாம்பே, வவனவத்த வீதியில் உள்ள முன்னாள் அமைச்சரின் இரண்டு மாடி வீட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 5-ம் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த சோதனையின் போது பின்வரும் ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன:
முன்னாள் அமைச்சரின் வீட்டில் டி-56 ரக துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. தற்போது பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின் பேரில், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago