Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதை அடுத்து, வெற்றிடமாகியுள்ள அவரது நாடாளுமன்ற ஆசனம் தனக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக மனோஜ் சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, தென் மாகாண சபையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், கலாசார மற்றும் கலைத்துறை விவகாரம், சமூக நலன்புரி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகாரம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வீடமைப்பு, மனிதவள மற்றும் தொழில்துறை அமைச்சராக மனோஜ் சிறிசேன பதவி வகித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், மாத்தறை மாவட்டத்தில் தோல்வியடைந்த வேட்பாளர்களின் பட்டியலில் அதிக வாக்குகளை பெற்று லக்ஷமன் யாப்பா அபேவர்தன முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் மனோஜ் சிறிசேன உள்ளார்.
எனினும், லக்ஷமன் யாப்பா அபேவர்தன தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
இந்த நிலையில், வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தன்னை நியமிப்பது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளரால் எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என, மனோஜ் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்திரசிறி கஜதீர காலமானதை அடுத்து, ஏற்பட்டுள்ள மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன பெயரிடப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
51 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026