2025 ஜூலை 05, சனிக்கிழமை

சந்திரிகா, அமுனுகம அரசியலுக்கு ‘குட்பாய்’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர், அரசியலிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பெரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார் என்று, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி கடும் முயற்சிகளைச் செய்திருந்த அதேவேளை, தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெற வைப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர், இன்னும் சில தினங்களில், இங்கிலாந்துக்குப் பயணமாகவுள்ளார் என்றும் அதற்கு முன்னர், இங்கிருக்கும் அவரது சொத்துகளை விற்பனை செய்வதற்குத் தீர்மானித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இ​தேவேளை, அரசியலிலிருந்து ஓய்வுபெறவுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லையென்றும் அறிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடாது, இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள அமுனுகம, அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதாகவும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .