2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்துக்கிடமான நோயாளர்களுக்கு நான்கு வைத்தியசாலைகள்

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 4 விசேட வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குறித்த 4 மாவட்டங்களில், கொரோனா தொற்றாளர்களும் நோய் அறிகுறிகளுடனும் இனம் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை பரிசோதிக்கவும், சிகிச்சையளிக்கவும் இந்த வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .