Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இடது பக்கத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதிக்கு வலது பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார்.
இந்த மாநாட்டில் வரவேற்புரையாற்றிய கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மாநாட்டுக்கு சமூகமளிக்கவில்லை என்றார்.
பௌத்த, ஹிந்து,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத அனுஸ்டானங்களுக்கு பின்னர் மாநாடு ஆரம்பமானது.
இந்த மாநாடு பொலன்னறுவை கதுருவெல ரஜரட்ட நவோதய விளையாட்டு மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இதேவேளை, இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜயசூரிய, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து மிகவும் முக்கியமான கடமைகளை செய்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும் எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய பதவிக்காலத்தை அதிகரித்து கொள்வதற்காக கட்சிக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார் என்றார்.
பேராசிரியர் அவ்வாறு கூறியபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பார்த்து புன்முறுவல் செய்துக்கொண்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
2 hours ago
4 hours ago