2025 மே 22, வியாழக்கிழமை

சந்நிதியில் ஜோடிகள் சந்திப்பதற்கு தடை

Thipaan   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது.

புனிதமான இந்தப் பிரதேசத்தில் பொழுதைப் போக்குவதைத் தவிர்க்கவேண்டும். இதனை மீறிச் செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமன்றில் அவ்வாறு வருகைதருக்கின்றவர்களின் வாகனங்களும் பறிமுதல்செய்யப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X