2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

சுன்னாகத்தில் சங்கிலி பறித்த சிப்பாய் கைது

Editorial   / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை, சுன்னாகம் பொலிஸார் வியாழக்கிழமை (26) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

 யாழ். மயிலட்டி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரை வழிமறித்த குறித்த சிப்பாய், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து உடனடியாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டைத் தொடர்ந்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், மேற்கொண்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் குறித்த இராணுவ சிப்பாயைக் கைது செய்ததுடன், பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .