Freelancer / 2025 டிசெம்பர் 26 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பாரிய அழிவை ஏற்படுத்திய சுனாமிப் பேரழிவின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.
35 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பேரழிவையும், அதன் பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதன் பிரதான நினைவு நிகழ்வு காலி, பெரலிய சுனாமி நினைவிடத்துக்கு அருகில் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேபோல், உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில், இன்று முற்பகல் 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி காரணமாக நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, இம்முறை மாவட்ட ரீதியில் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்கவும் அனர்த்த மேலாண்மை மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது. (a)
7 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
32 minute ago
2 hours ago