2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

சபைக்குப் புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து விசாரணை

Simrith   / 2025 நவம்பர் 11 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய அமர்வுகளின் போது சில எம்.பி.க்கள் பயன்படுத்திய பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழி பயன்பாடு குறித்து பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு முரணான மொழியைப் பயன்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நிலையியல் கட்டளை 82.1 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சபாநாயகர் இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய இத்தகைய வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சபாநாயகர், நேற்றைய அமர்வின் போது பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தியது குறித்து விசாரிக்குமாறு பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X