Janu / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து, போட்டியின் மிஸ் ஃபோட்டோ ஜீனியாக முடிசூட்டப்பட்ட சபீனா யூசப், புதன்கிழமை (04) அதிகாலை நாடு திரும்பினார்.
உலகெங்கிலும் உள்ள 60 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் பங்கேற்புடன், இப் போட்டி கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் (Las Vegas) நகரில் நடைபெற்றது.
இப் போட்டியின் தேசிய இயக்குநர் சந்திமால் ஜெயசிங்க, தேசிய பயிற்சியாளர் ருக்மல் சேனநாயக்க உட்பட ஏராளமானோர் சபீனா யூசப்பை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
டி.கே.ஜி. கபில

10 minute ago
20 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
47 minute ago