S.Renuka / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபரிமலை சன்னிதானத்தில் பத்திரிகையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செவ்வாய்க்கிழமை (30) அன்று மாலை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். நடப்பு சீசனையொட்டி எதிர்வரும் 14ஆம் திகதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் தோன்றும் மகர ஜோதியை சன்னிதானத்தில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
இதனிடையே. வழக்கமாக, நடை திறப்பு நாட்களில் சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.
இந்நிலையில், சபரிமலை தங்கம் அபகரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஏற்கெனவே சன்னிதானத்தில் பக்தர்கள் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதித்திருந்தது.
இந்தநிலையில், சன்னிதானத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பத்திரிகையாளர்களுக்கும் கேரள ஐகோர்ட்டு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago