2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சபைக்குள் குழப்பம்: ஆராயும் குழுவிலிருந்து மஹிந்த அணி விலகியது

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில், சபைக்குள் இடம்பெற்ற குழுப்பகரமான நிலைமைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, நேற்று (27) மீண்டும் கூடி ஆராய்ந்தது. இந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனவரி மாதம் சபைக்கு ஆற்றுப்படுத்தவுள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான மேற்படி குழுவில் மாவை சேனாதிராஜா, ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஐவர் அங்கம் வகிக்கின்றனர். அதில், மஹிந்த அணியைச் சேர்ந்த உறுப்பினர்களான, சமல் ராஜபக்‌ஷ மற்றும் கஜதீர ஆகியோர் விலகிக்கொண்டனர்.   

ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளிநாடா காட்சிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற பணியாட்கள் அடங்கிய குழு, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடமே, நேற்றையதினம் விசாரணைகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,   

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறென, உயர்நீதிமன்றத்தினால் வழக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவையடுத்து, சபையமர்வு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கூடப்பட்டது. அன்றிலிருந்து 16 ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு, சபைக்குள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .