Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
தனது அம்மாவின் சமாதிக்குச சென்று, அவரது நினைவு தினத்தை அனுஷ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அவ்விடத்திலேயே வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர் என, காத்தான்குடி பொலிஸார், தன்னிடம் தெரிவித்தனர் என, அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள.
நாவலடியில் உள்ள எங்களது அன்னையின் சமாதிக்குச் சென்று, அவரது நினைவு தினத்தை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அனுஷ்டித்து வருகின்றோம். ஆனால், சமாதிக்கு சென்று, நினைவு தினத்தை அனுஷ்டிக்கவேண்டாம் என்றும் அவ்வாறு சென்று அனுஷ்டித்தால் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
“சமாதிக்குச் சென்று, அன்னையின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பது, அரசியல்சார்ந்த செயற்பாடுகள் அல்ல, அன்னை பூபதி எனது தாயார் எனது தாயாரின் இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம்.அதில் எந்தவித பயங்கரவாத செயற்பாடும் இல்லை” என்றார்.
எனது தாயார், அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்துக்கு எதிராகவே போராடி உயிர்துறந்தார். அவர் ஆயுதமேந்தி எந்த போராட்டத்தையும் நடாத்தவில்லை எனத் தெரிவித்த அவர், இந்த நாட்டிலிருந்து இந்திய படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை பயங்கரவாதியாக சித்திரிக்கவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“உலககெங்கும் எங்கள் தாயாருக்கு நினைவு தினம் நினைவுகூரப்படும் நிலையில், அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடாத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago