Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நீதி கோரி ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து 'நீதியின் ஓலம்' கையெழுத்துப் போராட்டம் நேற்று (23) யாழ். செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தியே இந்த 'நீதியின் ஓலம்' எனும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தப் போராட்டம் மாணவி கிருசாந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணிப் பகுதியில் அணையா விளக்கு போராட்ட தூபி அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது. (a)
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது சனிக்கிழமை(23) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .