2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சமஷ்டி தீர்வுத்திட்ட முன்மொழிவு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 12 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

தமிழ் மற்றும் சிங்கள மொழி சார்ந்த வெவ்வேறு மாநிலங்களுக்கான சமஷ்டி யோசனையை முன்வைத்துள்ள வட மாகாணசபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு, எதிர்வரும் 22ஆம் திகதியன்று பூரணப்படுத்தப்பட்டு சபையில் முன்வைக்கப்படும் என்று வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், நேற்று (12) தெரிவித்தார். 

கே.சிவஞானம், நேற்று (12) தெரிவித்தார். 

அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்புக்கான வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு, எதிர்வரும் 22ஆம் திகதி பூரணப்படுத்தப்பட்டு சபையில் முன்வைக்கப்படுவதோடு, எதிர்வரும் 30ஆம் திகதியன்றில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் அவைத்தலைவர் கூறினார். 

அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்புக்கான வடமாகாண சபையின் கொள்கை முன்மொழிவின் முழுமைப்படுத்திய வடிவம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், நேற்று செவ்வாய்க்கிழமை (12), வடமாகாண சபையில் முன்வைக்கப்படும் என கடந்த 7ஆம் திகதி அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கிணங்க, நேற்று செவ்வாய்க்கிழமை (12), அதற்கான தனியான அமர்வொன்று, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் கூடியது. எனினும், வரைவு இன்னமும் பூரணப்படுத்தப்படாமையால் அது சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

முதலமைச்சரின் முன்மொழிவில் பல திருத்தங்கள், மாற்றங்கள் செய்வதற்கான பரிந்துரைகள் உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனைச் சீர்செய்ய வேண்டியுள்ளமையால், கொள்கை வரைவு முன்மொழிவு தாமதமாகின்றதாக அவைத்தலைவர் கூறினார். இதனால், நேற்றைய விசேட அமர்வானது மாற்றப்பட்டு, வழமையான வடமாகாண சபை அமர்வாகவே தொடர்ந்து நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய அவைத் தலைவர் சிவஞானம், 'அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்புக்கான வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. இன்னும், சில தினங்களில் பூரணப்படுத்தப்பட்டு, சபையில் முன்வைக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்' என்றார்.

'முதலமைச்சரின் முன்மொழிவில் பல திருத்தங்கள், மாற்றங்கள் செய்வதற்கான பரிந்துரைகள் உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதனைச் சீர்செய்ய வேண்டியுள்ளமையால், கொள்கை வரைவு முன்மொழிவு தாமதமாகின்றது. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில உள்ளடக்கங்களைக் கூறியுள்ளனர்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X