Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 22 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
'எழுக தமிழ்'ஆனது மக்களுக்கான ஒரு அமைப்பு அதில் சமூக அக்கறைக் கொண்டவர்களே உள்ளனர். எனினும் அதன் நடவடிக்கையை தெற்கில் திரிபுபடுத்தி கூறிவிட்டனர். வடக்கு மக்களின் அபிலாஷைகளை உலக்குக்கு எடுத்துக் காட்டும் நடவடிக்கையையே நாம் முன்னெடுத்திருந்தோம்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
வடக்கு- தெற்குக்கான கலந்துரையாடல்' எனும் ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியின் இன்று மாலை நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் கேள்விகளுக்க பதிலளிக்கையில் விக்கனேஸ்வரன், இதனைக் கூறினார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கையிலும் சமஷ்டி முறையினையே நாம் முன்வைத்துள்ளோம். சமஷ்டியே எமக்கு தேவை. இதனை நாம் மட்டுமல்ல தந்தை செல்வா காலத்தில் அவரும் சமஷ்டி கோரிக்கையையே முன்வைத்தார். எமது சமஷ்டி கோரிக்கையை அரசாங்கம் எந்தவிதத்தில் அணுகுகின்றது, என்ன முடிவெடுக்கின்றது என்பதை பார்த்த பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றி யோசிப்போம்' என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago