Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 16 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரையோர பாதுகாப்பு, சமுத்திரப் பாதுகாப்பு தொடர்பில், இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என, ஜப்பானிய பிரதமரின் தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் கென்டாரோ சொனோரா (Kentaro Sonoura MP) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள அவர், நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கரையோர பாதுகாப்பு, சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, இலங்கை, ஜப்பானுக்குமிடையில் புதிய ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேநேரம், சமுத்திர பாதுகாப்பு பிராந்திய கரையோர பாதுகாப்பு மாநாடு, இவ்வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், இது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் கடற்படையினருக்கு கரையோர பாதுகாப்பு பயிற்சிகளை வழங்கும் நவீன கப்பலொன்றை, இலங்கைக்கு வழங்க இதன்போது கென்டாரோ செனரேரா இணக்கம் தெரிவித்தார்.
ஜப்பான் இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிகளுக்கு நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் நிலக்கன்னி வெடிகளை அகற்றுவதற்கு வழங்கிய உதவிகளை பாராட்டினார். சில பிரதேசங்களில் மேலும் பல இடங்களில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அதற்கு உதவுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025