2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

Freelancer   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் சம்பத் மனம்பேரி செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக  குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X