Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார்துறை ஊழியர்களுக்கு, சம்பள உயர்வைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, நேற்று வியாழக்கிழமை(10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதற்கான சட்டமூலம், ஏற்கெனவே வரையப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தனியார்துறை ஊழியருக்கான சம்பளத்தை 2,500 ரூபாயினால் உயர்த்துமாறு அரசாங்கம் கேட்டதற்கு, 50 நிறுவனங்கள் மட்டும் இணங்கின.
இதனுள் சில அரை- அரசாங்க நிறுவனங்களும், தொழிற்சாலைகளையுடைய மிகச் சொற்பமான நிறுவனங்களும் அடங்குகின்றன.
தனியார்துறை ஊழியருக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 10,000 ரூபாயாக்கும் சட்டம், விரைவில் கொண்டுவரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .