2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

செயற்கை கடற்கரையில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவன்

Freelancer   / 2025 ஜூன் 27 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவர் கம்பஹா - அஸ்கிரியவைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவென்று நேற்று (26) காலை கடலில் ஸ்நோர்கெல் அணிந்து கடலின் அடிப்பகுதியைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ஒருவர் காணாமல் போனார்.

கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படை பிரிவு டைவர்ஸ் மற்றும் ரங்கல கடற்படை டைவர்ஸ் ஆகியோர் இணைந்து காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் கொழும்பு துறைமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .