Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகிறார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறவுள்ள பெரும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதியை கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து செம்மணி வரையும் கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது
இது தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (26) காலை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் வேண்டி நிற்பதாக தெரிவித்தனர்
இங்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம்,“ தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகிறார்கள் ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் போராட்டங்களில் மதத் தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பொதுமக்களையும் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி சர்வதேச நீதியூடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்க வழி சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்”
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago