Editorial / 2025 ஜனவரி 06 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.
நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும், அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு மேலும் தெரிவித்தார்.
அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை வீழ்ச்சியடையச் செய்யும் வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும், சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதனை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
15 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
43 minute ago
2 hours ago