Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (25) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது, கட்சித் தலைவர்களுக்கு இடையில், கடுமையான சொற்போர் இடம்பெற்றது.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், தன்னுடைய இரங்கல் செய்தியை, ஜனாதிபதிக்குத் தெரிவிக்காமல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்தது குறித்துக் கண்டனம் தெரிவித்த
தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (25) நடைபெற்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, “சரி அவர் தான் அப்படிச் செய்தார் என்றால், நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிக்குத் தெரிவிக்குமாறு கூறியிருக்கக் கூடாதா?” என, பிரதமரைப் பார்த்துச் சொன்னார்.
இந்தக் கேள்வியால் கடுப்பான பிரதமர், “உமது கருத்து, ஒரு ஐ.எஸ் அறிவிப்பு போல் உள்ளது” என, கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்மாநாட்டின் போது கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் மனோ கணேசன், அமைச்சராக இருப்பதற்கே வெட்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் பொறுப்பை ஆளுக்காள் சுமத்திக்கொண்டு இருக்காமல், உண்மையை ஏற்கவேண்டுமெனக் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென விமல் வீரவன்ச எம்.பி இங்கு தெரிவித்த அதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் எந்த முன்னெச்சரிக்கைகளும் பாதுகாப்புத் தரப்பினால் வழங்கப்படவில்லையென, ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago