2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Freelancer   / 2025 ஜூலை 05 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன்படி, கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. 

நேற்று 13,642 வளாகங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய 3,886 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

அவற்றில், 382 இடங்கள் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .