2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரியில் கோர விபத்து: இளைஞர் பலி

Freelancer   / 2025 செப்டெம்பர் 26 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி - நுணாவில் ஏ - 9 வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதனால் மேற்படி இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த திலகீஸ்வரன் யதுஸ் (வயது 20) என்ற இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .