2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சிவில் பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லூ

R. Yasiharan   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க-இலங்கை நட்புறவு மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் விதமாக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இன்று (19) இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில்,  சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் ஒதுக்கப்பட்ட  சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும் வலுவான சிவில் சமூகம் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X