Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையை, தொடர்ந்தும் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக வைத்திருக்க முடியாது என்று தெரிவித்த பிரதமர், அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கையின் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 'இந்நாட்டிலுள்ள அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் இருக்க வேண்டும்.
அவர்களுக்கு வருமானம் இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கல்வி, வீடு மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றிருக்க வேண்டும். இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும். அனைவரும் சிறந்த வருமானத்தைப் பெறுகிறார்களா என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
அனைவருக்கும் நிவாரணங்கள் கிடைக்கப்பெற வேண்டும். அனைவரும் பங்காளிகளாக வேண்டும்' என்றார்.
'எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டதன் பின்னர், இந்த இந்நாட்டிலுள்ள ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு காணி உரிமை வழங்கப்படும். அப்போது அவர்களால் விவசாயம் செய்யவோ வீடுகளை தங்களுக்கு வேண்டிய விதத்திலே அமைத்துக்கொள்ள முடியும். அவர்கள் அனைவரும் இந்த நாட்டின் பங்காளிகளாவர்' என்றும் பிரதமர் கூறினார்.
'எங்கள் முன்னால் பாரிய சவால்கள் பல உள்ளன. அவை அனைத்துக்கும் தீர்வு கண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும். பின்னோக்கி நகருதலாகாது' எனவும் பிரதமர் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.
31 minute ago
43 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
57 minute ago