2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

சஷீந்திர விவகாரம்: முன்னாள் இழப்பீட்டு அதிகாரி கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டு போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கிரிப்பன்வெவ மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷவுடன் சதி செய்ததாகக் கூறப்படும் இழப்பீட்டு அலுவலகத்தின் அப்போதைய பதில் பணிப்பாளர் நாயகம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் புதன்கிழமை (08)  கைது செய்யப்பட்டார்.

கிரிப்பன்வெவ மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ. 885,000 இழப்பீடு பெறுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அரச சொத்துக்களை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணையின் இரண்டாவது சந்தேக நபர், ராஜபக்ஷவுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்,  கொழும்பு பிரதான  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X