Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 19 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தவ்ஹீத் ஜமாய்த் அமைப்பின் தலைவரான சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட, பாடசாலை ஒன்றின் அதிபரும் பதில் அதிபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், இன்று கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களிருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானை- வீரச்சோலை பிரதேசத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் தேசிய தவ்ஹீத் ஜமாய்த் அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, நன்கு அறிந்து வைத்துள்ளவர்களென, ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .