2026 மே 05, செவ்வாய்க்கிழமை

சஹ்ரானின் மனைவி இரகசிய சாட்சியம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் மனை, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், நேற்று (15) மாலை, இரகசிய சாட்சியமளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே, இவர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, சஹ்ரானின் மனைவியும் அவருடைய நான்கு வயது மகளும் ஆஜர்படுத்தப்பட்டனர் என்றும் தற்கொலை குண்டுதாரியான மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமதின் தந்தை, சகோதரர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .