2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சாதனையை பாராட்டினார் ஹரின் பெர்னாண்டோ

Simrith   / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை 02 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையை எட்டிய சாதனையை இலங்கையின் முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று பாராட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கு 02 மில்லியன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதிகாரிகளால் அதனை அடைய முடிந்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ தனது 'X' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் நிர்ணயித்த 2025 ஆம் ஆண்டிற்கான 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அரசாங்கம் அடைய முடியும் என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார். 

“2024 இல் நாங்கள் கணித்தது உண்மையாகிவிட்டது, கடின உழைப்பு பலனளித்தது, நாங்கள் பூஜ்ஜிய சுற்றுலாப் பயணிகளுடன் ஆரம்பித்தோம்.

இச்சாதனையில் பங்காற்றிய தொழில்துறை மற்றும் இலங்கை சுற்றுலா ஊழியர்களுக்கு பாராட்டுக்கள், 2025 ஆம் ஆண்டிற்கான யதார்த்தமான இலக்காக 2.5 மில்லியனை அடைய புதிய அரசாங்கம் நல்ல பணியை தொடர வாழ்த்துகிறேன் ” என ஹரின் பெர்னாண்டோ 'எக்ஸ்' பதிவில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X