Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மார்ச் 03 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில், சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழி மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
சாந்தனின் உடல் வவுனியாவிற்கு இன்று(03) காலை எடுத்து வரப்பட்டது.இதன்போது உடலை தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினுள் உள்நுழைந்தது.
அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஊர்தி அருகே சென்று ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது. அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் என கூறினர்.
சாரதியினையும் வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவித்தனர். இதனால் அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
அதன் பின்னர் ஏற்பாட்டு குழுவினர் பழைய பேரூந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .